Thursday, November 13, 2008

படிப்பு திருத்தம் தர வேண்டும்

அய்யா நீண்ட நாட்களாய் மகிழ்ச்சி புலம்பல்கள் புலம்பிய நான் இன்று வெறுப்புடன் புலம்பபோகிறேன். நேற்று சென்னை சட்ட கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்ச்சி மக்களிடத்தில் மாணவர்கள் மீதான வெறுப்பை மீண்டும் வளர செய்துள்ளது...

சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களுக்கு இடையில் மோதிக்கொண்டு சக மாணவர்களை தாக்கியதும் அதை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தும் நாடறிந்த நிகழ்வுகள் ஆகும். வருங்கால சமுதாயத்தின் முக்கிய தூண்களான சட்டம் பயிலும் மாணவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பற்றி நான் புலம்ப போவது இல்லை. இனியும் அவர்கள் வன்முறையை கையில் எடுத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே நான் புலம்புகின்றேன்.

நாம் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எங்கே செய்கிறோம், இதை எல்லாம் கூட என்ன வேண்டாம். சிறிது மனிதாபிமானத்தோடு சிந்தித்து செயல்பட்டிருந்தால் இந்த நிலை வந்து இருக்காது. அதுவும் நேற்று இந்த நிகழ்வை நிகழ்த்தியது சட்டம் பயிலும் மாணவர்கள் என்பதை என்னும்போது நான் ஒரு மனிதன் என சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன். சமூகத்தில் யாரேனும் குற்றம் புரிந்தால் மக்கள் முதலில் நாடுவது காவல் துறையையும் அடுத்து நாடுவது சட்டம் பயின்ற வல்லுனர்களையும் தான். இவ்விரு பிரிவினரில், சட்டம் பயிலும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை வேடிக்கை பார்த்த காவல் துறையினரின் செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இவர்களின் மகனோ அல்லது உறவினரோ இவ்வாறு தாக்கப்படுவதை இவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பார்களா? காவல் துறையினர் தங்களின் நண்பன் என்பதை விளம்பரம் மட்டும் செய்தால் போதாது. அவர்கள் மக்களை நண்பர்களாக நினைத்து அவரின் இடர் படும் வேலையில் முன்வர வேண்டும்.

நாம் நம்முடன் ஒற்றுமையாய் இருந்தால் தான், அடுத்தவர்கள் சண்டை போடும்போது அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நேரத்தில், நாம் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசுவது நன்றாக இருக்காது.

மக்களே, நாம் இன்னமும் மக்களாக தொடர சிந்தித்து செயல் படுங்கள். மாக்களாக மாறாதீர்கள்..!!!

- கோபத்துடன் கிறுக்கன்...

1 comment:

Muniappan Pakkangal said...

Law college incident has shown the quality of law students & the efficiency of the police to the public.Nalla pulambal thambi.