Wednesday, November 5, 2008

அமெரிக்க தேர்தல் முடிவுகள்...

இதோ வருகிறது...

வருகிறது...

வந்து கொண்டே இருக்கிறது...

என அகில உலகையும் எதிர்பார்க்க வைத்த அமெரிக்க தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்து விட்டன...

ஊடகங்கள் கணித்தபடியே , பராக் ஒபாமா வெற்றி வாகை சூடி உள்ளார். முதன் முறையாக ஒரு ஆப்ரிக்க-அமெரிக்கன் வெற்றி பெற்று உள்ள நிகழ்வு மனதுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், அவரின் தேர்தல் வாக்குறுதிகள் சற்றே யோசிக்க வைக்கின்றன. அவரின் முக்கிய கொள்கை, அமெரிக்க பணிகளை அமெரிக்கர்களை கொண்டு செய்ய வில்லை என்றால், அந்த நிறுவனங்களுக்கு வரி விதித்து வரும் நிதியில் அமெரிக்க மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் என்பது தான்.

உண்மையில் இந்த கொள்கை மிகவும் சிறந்த ஒன்றாக இருந்த போதிலும் இந்த கொள்கையினால், பாதிப்பு அடையபோகும் நாடுகள் நம்மின் ஆசிய நாடுகளே ஆகும்.

அதை போன்றே, இனி அமெரிக்காவிற்கு வந்து நீண்ட காலம் வேலை செய்வதற்கு தேவை படும் எச் -ஒன் பி எனும் விசாவின் எண்ணிக்கை குறைக்கப்படும்... இதுவும் அவரின் வாக்குறுதிகளில் ஒன்று தான்... இதுவும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் வெறுக்கும் ஒரு கொள்கை ஆகும்...

இது வரையில் தன் பெண்ணிற்கு ஒரு தகவல் தொழில்நுட்ப மாபிள்ளை தான் வேண்டும் என அடம் பிடித்து வரும் பெற்றோர்களின் மனதில் இந்த கொள்கை ஒரு இடியாய் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

என்ன நடக்கும்??? ஆசிய நாடுகளின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ன ஆகும்? ஊடகங்களின் கணிப்பு படி, உலக நாடுகளின் எதிர்காலம் என அறியப்படும் ஆசிய நாடுகளின் மத்திய தர குடும்பங்களின் நிலை என்ன ஆகும்? நான் படித்து முடித்த வுடன், என் தந்தை வாங்கும் சம்பளம் போல் ஐந்து மடங்கு வாங்குவேன் எனும் இளைஞர்களின் கனவுகள் நினைவாகுமா? இவை அனைத்தும் நடந்தால் நன்றாக தான் இருக்கும்.

காலம் அறிய வைக்கும்... நானும் உங்களுடன் அதன் முடிவிற்காக காது இருக்கின்றேன்...

- உங்கள் அன்பு கிறுக்கன்!!!

1 comment:

velusamymohan said...

While all are heralding Obama,u have pointed out his policy 2 give job priorites 2 Americans,The result Jobseekers in America from outside will not be considered.Nice forecast.Dr.Mohan.