இன்னார் வாழ்ந்த நாளில் நாமும் வாழ்ந்தோம் என கூறும் வழக்கம் நம்மில் உண்டு. அவ்வாறே ரஹ்மான் எனும் அதிசயம் வாழும் நாட்களில் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு பெருமை தரும் விஷயம். இசையை புது உயரத்திற்கு கொண்டு செல்லும் அதிசய மனிதர் ரஹ்மான் என்றால் அது மிகை இல்லை.
உயரம் தொடும் மனிதன் மறக்கும் முதல் செயல் பணிவை மறப்பது. எத்துனை உயரம் தொட்டாலும் பணிவு மறவாமல் அடக்கம் கொண்டு நடக்கும் ரஹ்மான் ஒரு அதிசயம் என்றால் அது மிகை இல்லை.
இன்றும் ஒன்றல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியும் பணிவுடன் கடவுள்ளுக்கு நன்றி சொன்ன இந்த அதிசயம் இன்னும் பல சாதனைகள் புரிந்து தமிழுக்கும் இந்திய திரு நாட்டிற்கும் நற்பெயர் வாங்கி தர சிவராத்திரி யான இன்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். மீண்டும் புலம்பும் வரை "ஜெய் ஹோ"!!!

No comments:
Post a Comment